×

பூதலூர் அருகே பாரம்பரிய நெல் அறுவடை வேளாண் மாணவிகள் பங்கேற்பு

தஞ்சாவூர், மார்ச் 31: அனுபவ பயிற்சிக்கு வந்த வேளாண் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய நெல் அறுவடை பணியில் ஈடுபட்டனர். திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூதலூர் தாலுகா மாரனேரி கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி (60)/ விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை வேளாண்மை முறைகளை பயன்படுத்தி பாரம்பரிய நெல் ரகங்களான சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.

தற்போது இவர் பயிரிட்டுள்ள ரத்தசாலி ரக நெல் சாகுபடி முடிந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த வயலில் செங்கிப்பட்டி அருகேயுள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் அனுபவ பயிற்சிக்காக சீருடையுடன் வயலில் இறங்கி ரத்தசாலி ரக நெல்லின் பயன்கள், பயிர் செய்யும் முறைகள் குறித்து விவசாயி பசுபதியிடம் கேட்டறிந்தனர். அறுவடை பணிக்கு வந்த தொழிலாளர்களிடம் இருந்த அரிவாளை வாங்கி வயலில் இறங்கி அறுவடை பணியிலும் ஈடுபட்டனர்.

The post பூதலூர் அருகே பாரம்பரிய நெல் அறுவடை வேளாண் மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Boothalur ,Thanjavur ,Pasupathi ,Maraneri ,Thirukkatupalli ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி...